Saturday, September 11, 2010

தலைவர்'s Speech in எந்திரன் Trailer Release:

Saturday, September 11, 2010

எல்லா புகழும் இறைவனுக்கே.

இந்த டிரெய்லரை தயாரித்து நிறைய நாளாகிவிட்டது. மலேசியாவில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவிலேயே இதை திரையிட இருந்தோம். பட ரிலீசுக்கு இன்னும் நிறைய நாள் இருக்கிறது. பின்னர் வெளியிடலாம் என இயக்குனர் ஷங்கர் கூறினார். இயக்குனர் சொல்வதுதான் சரி என கலாநிதி மாறனும் ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு விஷயத்தையும் கலாநிதி மாறன் திட்டமிட்டு திறம்பட செய்து வருகிறார்.

‘எந்திரன்’ படம் சம்பந்தமாக இன்னும் நிறைய விழாக்கள் உள்ளது. அவற்றில் நான் பேச வேண்டும். இதனால் படம் பற்றி கொஞ்சமாக பேசுகிறேன்.
ஷங்கரின் பெரிய கனவை நனவாக்கியுள்ளார் கலாநிதி மாறன். அவர் இல்லாவிட்டால் படம் இந்த அளவுக்கு வந்திருக்காது. படத்துக்கு 3 செட் போட வேண்டும். அதற்கு சென்னையில் வசதி இல்லை. ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டிக்குதான் போக வேண்டும் என சொன்னோம். எவ்வளவு பெரிய ஃப்ளோர் வேண்டும் என கலாநிதி மாறன் கேட்டார். ஆறே மாதத்தில் பெருங்குடியில் மூன்று ஏசி ஃப்ளோர்களை ஏற்படுத்தி கொடுத்தார்.

இரண்டு வருஷத்துக்கு முன்பு அவர் என்னிடம் பேசும்போது, ‘தென்னிந்தியாவில் பட புரமோஷனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். வட இந்தியாவில் மட்டும் மீடியாவுக்கு நீங்க பேட்டி தந்து உதவ வேண்டும்’ என கேட்டார். ‘என் மீது நம்பிக்கை வைத்து, இவ்வளவு பெரிய படம் எடுக்கும்போது கண்டிப்பாக இதை செய்வேன்’ என்றேன். இப்போது படம் முடிந்துவிட்டது. எந்திரன் சம்பந்தமாக பேட்டி வேண்டும் என மீடியாக்கள் கேட்கின்றன. ஒரே படத்தை பற்றி திரும்ப, திரும்ப எப்படி பேசுவது என கலாநிதி மாறனிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘நீங¢கள் எதுவும் செய்ய வேண்டாம். ஆடியோ விழாவில் கலந்துகொண்டு பேசுங்கள். மற்ற விழாக்களுக்கு சும்மா வந்தால்போதும். ரெட் கார்பட் எப்போதும் உங்களுக்கு இருக்கும்’ என்றார்.

நான் பஸ்சில் டிக்கெட் கொடுத்தவன். எனக்கு ஆட்டோ டிரைவர், ரவுடி கேரக்டர்தான் பொருத்தமாக இருக்கும். விஞ்ஞானி கேரக்டருக்கு நான் எப்படி பொருந்துவேன் என ஷங்கரிடம் கேட்டேன். 4 நாள் செட்டுக்கு போனேன். அதன்பின் அந்த கேரக்டருடன் ஒன்றிவிட்டேன்.

அடுத்தது ரோபோவாக நடிக்க வேண்டும் என்றார். இயந்திரமாக எப்படி நடிப்பது என்றேன். அவரே ஹோம்ஒர்க் செய்து என்னை நடிக்க வைத்தார். இதில் நான் நடிக்கவில்லை. எல்லாமே ஷங்கர்தான். அவருக்கே அனைத்து புகழும்.

வைரமுத்து பேசும்போது, நூறடி தாண்டிவிட்டார் ரஜினி. அடுத்தது என்ன? என கேட்டார்.

அடுத்த படம் பற்றி நான் சிந்திக்க மாட்டேன். அது என் வேலையில்லை. நல்ல திறமையான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளனர். அவர்கள் சிந்தித்து எனக்காக தரும் வேலையை செய்வேன்.

எனது எளிமை பற்றி பெருமையாக பேசினார்கள். சிறு உயரத்திலிருந்து விழுந்தால் அடிபடாது. ஆனால் நீங்கள் (ரசிகர்கள்) என்னை பெரிய உயரத்தில் அமர வைத்துவிட்டீர்கள். அங்கிருந்து விழுந்தால், அட்ரஸ் இல்லாமல் போய்விடுவேன். அதனால் எளிமையாக இருந்தாகணும்.

ஸ்டைலாக, இளமையாக இருக்கிறேன் என்றும் சொன்னார்கள். கொஞ்சம் உடற்பயிற்சி, கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் சாப்பாடு, கொஞ்சம் பணம் சம்பாதிப்பது என இருந்தால் இளமையாக இருக்கலாம்.

இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நான் எந்த படத்தில் நடித்தாலும் அது தமிழர்களை பெருமைப்படுத்தும் படமாகவே இருக்கும். ‘எந்திரனு’ம் அத்தகைய படம்தான்.

1 comment:

apshekhar said...

Hi Maruthi,
Fine
Today only i have seen your blog.Rarely it very nice, every day (if possible)i will give you constructive comments
CU
DR.APSR