Sunday, October 30, 2011

தாய் பக்தி

(என் அன்னையின் பிறந்தநாள் இன்று)

(30௦.10௦ -> 30 அக்டோபர்)


முப்பது பத்து..

முன்னுறு நாட்கள் தவம் புரிந்து

முத்தொன்றை இப்பூவுலகிற்கு புறம் தள்ளிவிட்டவள் நீதான் அம்மா..


பிற உணவு நஞ்சாகும் என

பிஞ்சிலே நெஞ்சமுது ஊட்டியவளும் நீதான் அம்மா..


என்னை சுவாசிக்க வைத்தாய்

என்ன வியப்பு நான் வாசித்த முதல் கவிதை நீதான் அம்மா...


உலகநூல் பயில சொன்னாய், என்

உலகமே நீதான் அம்மா...


தேவாலயம் போக சொல்வாய், என்

தெய்வமே நீதான் அம்மா...


பிழை ஒன்று நான் செய்தால்

பிரம்பால் அடிப்பவளும் நீதான் அம்மா...


வலியால் நான் அழுதால்

வாரி அணைத்து தேன் சொற்கள் பேசுபவளும் நீதான் அம்மா...


ஊரு உறங்கும் வேளையிலே எனக்கு

உணவு சமைப்பவளும் நீதான் அம்மா..


நோய் என நான் படுத்தால்

நோம்பு கிடப்பவளும் நீதான் அம்மா..


படைத்தவனை பழித்து விட்டு என்னோடு

பத்திய உணவு புசிப்பவளும் நீதான் அம்மா..


கனவிலும் நான் அழுதால்

கண் விழிப்பவளும் நீதான் அம்மா..


எந்த தவமும் செய்யவில்லை, உன்னை பெறுவதற்கு

எந்த வரமும் தேவையில்லை, நீ போதும் எனக்கு.


~பா.மா.ஷ.

1 comment:

Anonymous said...

convey my belated birthday wishes to AMMA:-)

Hands off to all mothers!!